top of page
pexels-elina-krima-3377405.jpg

Thamizhachi

தமிழச்சி

a digital museum of Tamil women under construction

கட்டுமானத்தில் உள்ள, தமிழ் பெண்ணின் இலக்கமுறை அருங்காட்சியகம்

Welcome to this exploration of

 the Tamil woman in Singapore as she is
imagined, illustrated, identified,

deliberated, disputed, displayed,

collected, curated, constructed… by herself.

சிங்கப்பூரில் உள்ள தமிழ் பெண், தன்னைப் பற்றி தானே

கற்பனை செய்து, விளக்கமளித்து, அடையாளம் கண்டு,

திட்டமிட்டு, விவாதித்து, சித்தரித்து,

சேகரித்து, நிர்வகித்து, தானே கட்டிய

இந்த ஆய்வுப்பயணத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

pexels-elina-krima-3377405.jpg

Objects

பொருட்கள்

Our world is material. Here are some objects that occupy the worlds, move the lives, and tell the stories of Singaporean Tamil women. These are a part of the ever-evolving assemblage of the Thamizhachi, perpetually ‘under construction’. 

 

பொருள்வகையால் உருவானதே நம் உலகம். சிங்கப்பூர் தமிழ் பெண்களின் உலகை ஆக்கிரமித்து, வாழ்க்கையை வழி நடத்தி, அவர்களின் கதைகளைச் சொல்லும் சில பொருட்கள் இங்கே உள்ளன. இவை நிரந்தர கட்டுமானத்தில் உள்ள, வளர்ந்து வரும் தமிழச்சியின் சேகரிப்பில் ஒரு பகுதியாகும்.

sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png
sticker pottu.png

Suggest another object that is part of and/or animates the life of a Singaporean Tamil Woman.
The object need not be exclusive to this group, nor need it represent all the lives in this group.
Name the object and briefly explain its significance to the Singaporean Tamil Woman.

Thanks for submitting!

Objects
Persons
pexels-elina-krima-3377405.jpg

Persons

நபர்கள்

The Singaporean Tamil woman is not a singular type of person. Here are some Thamizhachis, who are each ‘Singaporean’, ‘Tamil’, and ‘woman’ in ways shared, and of their own making. These profiles include the collaborating participants and creators of this digital museum. Several additional persons are highlighted as ‘Singaporean Tamil women,’ whose faces, lives, and work are also those of this community.

 

சிங்கை தமிழ் பெண் என்பவள், ஒற்றை வகையான நபர் அல்ல. ‘சிங்கப்பூரர்’, ‘தமிழரர்’, மற்றும் ‘பெண்’ என்ற அடையாளங்களை பகிர்ந்து கொண்டு, தம் அடையாளங்களை சுயமாக தயாரித்த  சில தமிழச்சிகள் இங்கே உள்ளனர். இந்த சுயவிவரங்களில், நமது இலக்கமுறை அருங்காட்சியகத்திற்கு ஒத்துழைத்த பங்கேற்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளனர். பல கூடுதல் நபர்களின் முகங்கள், வாழ்க்கைகள் மற்றும் தொழிலும் இந்த சமூகத்தை சார்ந்துள்ளதால், அவர்களும் ‘சிங்கை தமிழச்சிகளாக’ இங்கே சிறப்பிக்கப்படுகிறார்கள்.

03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png
03f7331cc322295d71005b51072ce40d.png

About Thamizhachi

The Construction

‘Thamizhachi: a digital museum of Tamil Women under construction’ is a Brown Voices project, presented under T:>Works’ N.O.W. festival 2021. The presentation of this digital museum is also extended in Rasanai, a lecture-performance, under the same festival.

 

Thamizhachi and Rasanai are conceptualised by curator-researcher Vithya Subramaniam, and supported by the directorial work of Grace Kalaiselvi, and Raj Thiagaras’ writing and translations. This team from Brown Voices extends their appreciation to N.O.W. festival director Noorlinah Mohamed, and intern Sai Lalitha Aiyer for their support, work, and excitement over these many months.

 

The digital museum was put together through a series of consultative workshops conducted with twenty-two self-identified ‘Singaporean Tamil women’. The museum features their comments on all objects, as well as some objects highlighted and contributed by them. The team thanks our participants for trusting us with their ideas, stories, and enthusiasm for this museum. The participants and their individual ways of being a Thamizhachi form the basis of the ‘Persons’ page.

இந்த கட்டுமானம்

 

“தமிழச்சி: கட்டுமானத்தில் உள்ள, தமிழ் பெண்ணின் இலக்கமுறை அருங்காட்சியகம்”, T:>Works நிறுவனத்தின் N.O.W. 2021 விழாவின் ஒரு அங்கமாக, Brown Voices குழுவால் படைக்கப்படுகிறது. இந்த இலக்கமுறை அருங்காட்சியகத்தின் படைப்பு, இதே விழாவில் இடம்பெறும் “ரசனை” எனும் விரிவுரை நிகழ்ச்சியிலும் நீடிக்கும்.

 

 “தமிழச்சி” மற்றும் “ரசனை”, பொருட்காட்சி மேற்பார்வையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் வித்யா சுப்ரமணியத்தால் கருத்துருவாக்கம் கொண்டு, கிரேஸ் கலைச்செல்வியின் இயக்கம் மற்றும் ராஜ்குமார் தியாகராஸின் எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பு சேவையால் மெருகேறியுள்ளன. இத்தனை மாதங்களாக நமக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஊக்கமளித்த N.O.W. விழா இயக்குனரான நூர்லினா முகம்மது மற்றும் உள்ளுறைவாளர் சாய் லலிதா அய்யர் அவர்களுக்கு இந்த Brown Voices குழு நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

 

 ‘சிங்கப்பூர் தமிழ் பெண்கள்’ என்று சுய அடையாளம் கண்ட இருபத்தி இரண்டு பெண்களுடன் நடத்தப்பட்ட தொடர் ஆலோசனை பட்டறைகள் மூலம் இந்த இலக்கமுறை அருங்காட்சியகம் உருவானது. அனைத்து பொருட்களைப் பற்றி அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்களும், அவர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டு தருவித்த சில பொருட்களும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்திற்கான அவர்களின் கருத்துக்கள், கதைகள் மற்றும் உற்சாகம் அனைத்தும் எங்களை நம்பி தாராளமாக பகிர்ந்த எங்கள் பங்கேற்பாளர்களுக்கு நமது குழு தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது. நமது பங்கேற்பாளர்களும், தமிழச்சியாக இருப்பதற்கான அவர்களின் தனிப்பட்ட வழிகளும் ‘நபர்கள்’ பக்கத்தின் அடிப்படையாக அமைகின்றன.

About

The Museum

 

This digital museum is a work-ever-in-progress that seeks, in part, to spotlight and remedy the ‘invisibility’ of the Singaporean Tamil woman in the narratives, memories, spaces, cultural productions, and popular discourse of her own nation.

 

The lives, stories, and presence of these women assert right of place and legitimacy by leveraging on the authority of the museum form. However, objects are not simply selected on some notion of aesthetic or cultural ‘value’. Instead, the objects of this museum consciously refuse essentialised, homogenised, and/or tokenistic representations of the diverse ways of being a Singaporean Tamil woman. 

 

The objects in this museum are everyday objects. They are things that are part of the Singaporean Tamil woman’s everyday, and of several other everydays in Singapore. In highlighting such objects, this museum underscores that the lives of racial and gender minorities are no less present in the same things many others use, make, buy, want, keep, give, and share. Their lives, though, move in its own rhythms around and through these objects, carving distinct memories and meaning with these materials.

 

The Thamizhachi is present in everyday things, in everyday spaces, in Singapore’s everyday. The Thamizhachi is a construction-ever-in-progress, she is not to be reduced to a token, her presence is not to be passed over.

இந்த அருங்காட்சியகம்

 

கதைகள், நினைவுகள், இடங்கள், கலாச்சார தயாரிப்புகள் மற்றும் தனது சொந்த தேசத்தின் பிரபல பிரசங்கங்களின் மூலமாக, சிங்கப்பூர் தமிழ் பெண்ணின் ‘கண்ணுக்குத் தெரியாத தன்மையை’ கவனத்திற்கு கொண்டு வந்து, அதற்கு தீர்வு காண முற்படுவதே இந்த இலக்கமுறை அருங்காட்சியகத்தின் என்றும் தொடரும் பணியாகும்.

 

அருங்காட்சியக வடிவத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த பெண்களின் வாழ்க்கை, கதைகள் மற்றும் இருப்பு ஆகியவற்றுக்கு இடம் மற்றும் சட்டபூர்வமான உரிமை வழங்கப்படுகின்றன. இருப்பினும், அழகியல் அல்லது கலாச்சார ‘மதிப்பு’ குறித்த சில கருத்துக்களின் அடிப்படையில் மட்டும் இப்பொருட்கள் வெறுமனே தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, இந்த அருங்காட்சியகத்தின் பொருட்கள் ஒரு சிங்கப்பூர் தமிழ் பெண்ணாக இருப்பதற்கான பன்முகத்தன்மை கொண்ட அடையாளங்களில் அத்தியாவசியமான, ஒரே விதமான மற்றும் பெயரளவில் மட்டும் செயல்படும் அடையாளங்களுக்கு உணர்வுபூர்வமான வகையில் மறுப்பு தெரிவிக்கின்றன.

 

இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள், அன்றாட பொருட்களே. அவை சிங்கப்பூர் தமிழ் பெண்ணின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், சிங்கப்பூரில் உள்ள பல தினசரி வாழ்க்கை விஷயங்களை சார்ந்தும் உள்ளன. அன்றாட பொருள்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம், இன மற்றும் பாலின சிறுபான்மையினரின் வாழ்க்கையானது பலர் பயன்படுத்தும், தயாரிக்கும், வாங்கும், விரும்பும், வைத்திருக்கும், கொடுக்கும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் அதே விஷயங்களிலும் எந்தவித குறைப்பாடும் இல்லை என்பதை இந்த அருங்காட்சியகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், அவர்களின் வாழ்க்கை இந்த பொருட்களுடன் தனித்துவமான நினைவுகளையும் பொருளையும் செதுக்கி, இந்த பொருள்களைச் சுற்றியும் அதன் மூலமாகவும் அதன் சொந்த தாளங்களில் நகர்கிறது.

 

தமிழச்சி என்பவள் அன்றாட விஷயங்களில், அன்றாட இடைவெளிகளில், சிங்கப்பூரின் அன்றாட வாழ்க்கை முறையில் நிறைந்துள்ளாள். தமிழச்சி என்பவள் எப்போதும் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு கட்டுமானம். அவளை ஒரு குறி அடையாளமாகக் குறைக்கவோ, அவளுடைய இருப்பை கடந்து செல்லவோ முற்படக்கூடாது.

bottom of page