top of page



A Manimekalai D/O Arumugam / மணிமேகலை ஆறுமுகம்
62
Retired Teacher / பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்
மணிமேகலை ஒரு தமிழச்சி என்று கூற விரும்புவதற்கு, என் அப்பாவே காரணம். அவர் நான் தமிழ் படிக்க வேண்டும் என்று விரும்பினார். அதே போல் நான் தமிழ் கற்றேன். பின் தமிழாசிரியராகப் பணியாற்றினேன். தமிழில் பேசும் பொழுதும் தமிழ் கற்பிக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கும். மேலும், இந்தியப் பாரம்பரியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாகவும் மலைப்பாகவும் இருந்தது. தமிழரின் பண்பாடும் பாரம்பரியமும் பற்றி அறிவதில் ஓர் இன்பம் ஏற்பட்டது. இவையே நான் தமிழச்சி என்று கூறுவதற்கும் இருப்பதற்கும் மகிழ்கிறேன்.
bottom of page