A.Manimekalai.png.jpg

Thayiramma / தயிரம்மா

Entrepreneur / தொழில்முனைவர்

“Thayiramma is a Thamizhachi who lives rent free in my mind. I first encountered her as this image in Sharon Siddique and Nirmala Purushotam’s canonical book on Little India. I then learnt that she was a famous sight that many today still remember. ‘Thayiramma’, as she is popularly known, is a colloquialism meaning ‘yoghurt-mother’. I do not yet know her real name. Between land-use policies and unscrupulous landlords, she lost her previous spaces in Potong Pasir and Ang Mo Kio for rearing cows and selling dairy products. She then took to selling her homemade yoghurt from this wooden crate on the five-foot-way outside Komala Vilas, holding court in the very centre of our community space well into the 1980s. Her proud gaze, the simplicity of her enterprise, the tenacity of her story persists. She often surfaces, unplanned, in my work and I find myself holding up her picture to tell collaborators ‘Her. I want to see her.’” — Vithya Subramaniam, Creator/Curator of Thamizhachi

“தயிரம்மா, என் எண்ணங்களில் குடியிருக்கும் ஒரு தமிழச்சி. குட்டி இந்தியாவை குறித்த ஷரோன் சித்திக் மற்றும் நிர்மலா புருஷோத்தத்தின் நியமன புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு உருவமாக நான் அவரை முதலில் சந்தித்தேன். அவர் இன்றும் பலரின் நினைவில் இருக்கும் ஒரு பிரபலமான நபர் என்று நான் பிறகு அறிந்தேன். ‘தயிர்-தாய்’ என்று அவரைப் பொதுவாக குறிக்கப் பயன்படும், பேச்சுவழக்கில் உருவான ஒரு பெயரே ‘தயிரம்மா’. அவருடைய உண்மையான பெயர் எனக்கு இன்னும் தெரியவில்லை. நில பயன்பாட்டுக் கொள்கைகளாலும், நேர்மையற்ற நில உரிமையாளர்களாலும், மாடுகளை வளர்ப்பதற்கும், பால் பொருட்களை விற்பனை செய்வதற்கும் போடோங் பசிர் மற்றும் அங் மோ கியோவில் இருந்த முந்தைய இடங்களை அவர் இழந்தார். பிறகு 1980ஆம் காலக் கட்டம் வரை, கோமலா விலாஸுக்கு வெளியே இருக்கும் ஐந்தடி வழியில் கடை போட்டு, நம் சமூக மையத்தில் தனது வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிரை மரக் கூடையின் மீது வைத்து விற்பனை செய்தார். அவருடைய பெருமைமிக்க பார்வை, அவருடைய நிறுவனத்தின் எளிமை, அவரது கதையின் உறுதித்தன்மை அனைத்தும் எண்ணத்தில் நீடிக்கின்றன. அவர் பெரும்பாலும் என் வேலையில், திட்டமிடப்படாத வண்ணம் என் நினைவில் தோன்றுகிறார். மேலும், என் ஒத்துழைப்பாளர்களிடம் ‘அவர் - நான் அவரைக் காண விரும்புகிறேன்,’ என்று அவரின் படத்தை பிடித்தவாறு கூறுகிறேன். - வித்யா சுப்ரமணியம், தமிழச்சியின் படைப்பாளி / கண்காணிப்பாளர்