top of page
A.Manimekalai.png.jpg

Joena Shivani (Sandhiya) / ஜோயனா சிவானி (சந்தியா)

43

Activist / ஆர்வலர்

Joena Shivani (a.k.a. Sandhiya) is a Thamizhachi who actively works to represent and uplift her community. Drawing from her own struggles as a young transwoman, Sandhiya is now a transgender activist with several organisations that seek to provide shelter, aid, and care for transexual persons. Sandhiya currently runs Agni Jothi, a group that believes educating society is key to the wider acceptance of trans individuals. She was a research consultant on a project by NUS-CARE centering transgender individuals in health care. She was also consultant and performer in Avant Theatre’s Akka: The End (2014), and Akka 3 (2015). These are, to date, Singapore’s only Tamil plays centering the transexual subject and experience. Sandhiya also acted in ‘Thoppul Kodi’, a short film by Yogitha Sachu raising awareness about transwomen.

ஜோயனா சிவானி (சந்தியா), தனது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும் மேம்படுத்தவும் தீவிரமாக பணியாற்றும் ஒரு தமிழச்சி ஆவார். பல போராட்டங்களைக் கடந்த ஒரு இளம் திருநங்கையான சந்தியா, இப்போது ஒரு திருநங்கை ஆர்வலராக உள்ளார். பல அமைப்புகளுடன் திருநங்கைகளுக்கு தங்குமிடம், உதவி மற்றும் பாதுகாப்பு அளிக்க முயல்கிறார். டிரான்ஸ் தனிநபர்களைப் பரவலாக ஏற்றுக்கொள்வதற்கு சமுதாயத்தை பயிற்றுவிக்கும் முக்கிய நோக்கத்தில் சந்தியா தற்போது அக்னி ஜோதி என்ற குழுவை நடத்தி வருகிறார். NUS-CARE வழிநடத்திய திட்டம் ஒன்றில், திருநங்கைகளை மருத்துவப் பராமரிப்பில் மையமாகக் கொண்ட ஆராய்ச்சியில் ஆலோசகராக இருந்தார். அவாண்ட் நாடகக் குழுவின் 2014ஆம் ஆண்டில் அரங்கேறிய “அக்கா: தி எண்ட்” மற்றும் 2015ஆம் ஆண்டில் அரங்கேறிய “அக்கா 3” ஆகிய நாடகங்களில் ஆலோசகராகவும், நடிகராகவும் பணிபுரிந்தார். இந்நாடகங்கள் இதுவரை திருநங்கைகளின் வாழ்க்கை மற்றும் அனுபவங்களை மயமாகக் கொண்ட ஒரே சிங்கை தமிழ் நாடகத் தொகுப்பாக திகழ்கின்றன. திருநங்கைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், யோகிதா சச்சுவால் தயாரிக்கப்பட்ட “தொப்புல் கொடி” என்ற குறும்படத்திலும் சந்தியா நடித்துள்ளார்.

bottom of page