A.Manimekalai.png.jpg

Sarojanee Rajoo / சரோஜனி ராஜூ

75

Tamil Teacher / தமிழ் ஆசிரியர்

Sarojanee is a Thamizhachi who has inspired generations of Tamil students. She was born to a Chinese family, then adopted by a Tamil one. Unlike her siblings, her adoptive parents could only enroll her in Saarathaa Devi School, a Tamil-medium school, for a lack of her birth documents. She learnt to love the Tamil language from her walks to school with her Tamil teacher. Since then, Sarojanee has been part of many important milestones in Tamil education in Singapore. In 1960, She was part of the pioneering batch of students at Umar Pulavar Tamil High School, the first and only Tamil-medium high school in Singapore. In 1964, she joined an early batch of Tamil language teachers trained at the Teachers’ Training College (now NIE). Sarojanee has since been teaching Tamil at Naval Base Secondary School for the past 56 years. She has always encouraged her students to participate in events, especially radio plays. She is an unwavering champion of her Normal stream students, and is especially proud to see them return as graduates. One student even donned Sarojanee in their graduation robes. She says, ‘I may not be a degree holder, but I am a graduate at heart’.

சரோஜனி, தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மாணவர்களுக்கு உத்வேகம் அளித்த ஒரு தமிழச்சி ஆவார். அவர் ஒரு சீன குடும்பத்தில் பிறந்து, பிறகு ஒரு தமிழ் குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டார். அவரது பிறப்பு ஆவணங்கள் இல்லாத காரணத்தால், அவரது சகோதரர்களைப் போலல்லாமல், அவரது வளர்ப்புப் பெற்றோர்கள் அவரை சாரதா தேவி, தமிழ் பள்ளியில் சேர்த்தனர். அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியையுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்று வந்ததால் அவர் தமிழ் மொழியை நேசிக்கக் கற்றுக்கொண்டார். அப்போதிலிருந்து, சரோஜனி சிங்கப்பூரில் தமிழ் கல்வியின் பல முக்கியமான மைல்கற்களின் ஒரு பகுதியாக அங்கம் வகிக்கிறார். 1960ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் முதல் மற்றும் ஒரே தமிழ் நடுத்தர உயர்நிலைப் பள்ளியான உமறுபுலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் முன்னோடி மாணவர்களில் ஒருவராக இருந்தார். 1964ஆம் ஆண்டில், ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் (இப்போது NIE) பயிற்சி பெற்ற தமிழ் மொழி ஆசிரியர்களின் ஆரம்ப தொகுப்பில் சேர்ந்தார். அன்றிலிருந்து கடந்த 56 ஆண்டுகளாக நேவல் பேஸ் உயர்நிலைப் பள்ளியில் சரோஜனி தமிழ் கற்பித்து வருகிறார். அவர் எப்போதும் தனது மாணவர்களை நிகழ்வுகளில், குறிப்பாக வானொலி நாடகங்களில் பங்கேற்க ஊக்குவிப்பார். அவர் தனது இயல்பு நிலை மாணவர்களுக்காக போராடத் தவறமாட்டார். மேலும், அவர்கள் பட்டதாரிகளாகத் திரும்புவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறார். ஒரு மாணவர் சரோஜனிக்குத் தன் பட்டமளிப்பு உடையை அணிவித்தார். ‘நான் பட்டம் பெற்றவளாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், என்னைப் பொறுத்தவரை, நானும் ஒரு பட்டதாரியே’ என்று அவர் கூறுகிறார்.